எல்லை தாண்டி சரித்திரம் படைத்த கிம்: உலகின் பார்வையே கொரிய தீபகற்பத்தின் மேல்….

0
623
Korea Peace Treaty

Korea Peace Treaty

சுமார் 65 ஆண்டுகால இடைவெளிக்குப்ப்பின் கொரிய தலைவர்கள் இன்று சந்தித்துக்கொண்டனர்.

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு ஜனாதிபதிகள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது.

வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

திடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினர்.

அப்போது ஏப்ரல் 27-ம் திகதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இரு நாட்டு எல்லை யில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் இன்று உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார்.

வடகொரியா தென் கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டு பகுதியில் வந்திறங்கிய கிம்மை, தென்கொரிய ஜனாதிபதி மூன் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தென்கொரிய அதிகாரிகளை கிம்மிற்கு மூன் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களது சந்திப்பை பதிவு ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர்.

இந்த சந்திப்பில் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகின்றது.

இந்நிலையில், கொரிய யுத்தத்தை உத்தியோகபூர்வமாக நிறுத்துவதற்கு இரு நாடுகளும் இவ்வருட இறுதியில் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

இந்தத்தருணத்திற்கு தான் நீண்டநாட்களாக காத்திருந்ததாக வட கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here