எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் கொள்ளை

0
894
passengers bags robbery katunayake airport

(passengers bags robbery katunayake airport )
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயணிகளின் 75க்கும் மேற்பட்ட பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போவது தொடர்பாக இதுவரை 75க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணப் பொதிகள் தவறுதலாக காணாமல் போனதா அல்லது திட்டமிடப்பட்ட வகையில் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி நபர் ஒருவர் பயணி ஒருவரின் பயணப் பொதியை களவெடுத்து செல்லும் காட்சி விமானநிலையத்திலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:passengers bags robbery katunayake airport , passengers bags robbery katunayake airport