{ 2 packs pack corn flour }
முதன் முதலாக ஒருவரைக் காணும்போது, அவர்களின் தோற்றத்தை வைத்து தான் எடை போடுவோம். குறிப்பாக அவர்களின் முகத்தை மட்டுமே நாம் கவனிப்போம். ஆகவே அத்தகைய முகத்திற்கு சிறப்பான கவனம் தேவை.
முகத்தில் உள்ள சருமத்திற்கு சரியான விதத்தில் பாதுகாப்பு கிடைக்க வில்லை என்றால், முகம் சோர்வாக, அழுக்காக வறண்டு காட்சியளிக்கும். இதனைத் தடுக்க பெண்கள் இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி முக அழகை பாதுகாக்க நினைக்கின்றனர்.
இயற்கையான பொருட்கள் சருமத்திற்கு அழகையும் பொலிவையும் தருகின்றன.
இன்றைக்கு நாம் சோள மாவு பயன்படுத்தி செய்யும் பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். சோளமாவு ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள் ஆகும். பல அற்புதமான அழகு தன்மைகள் கொண்ட ஒரு மூலப்பொருளாக சோளமாவு விளங்குகின்றது. சோள மாவு எண்ணெய் உறிஞ்சும் மற்றும் தூய்மைப்படுத்தும் பண்புகளால் நிரம்பியுள்ளது.
இதனை முகத்திற்கு பயன்படுத்துவதால், உங்கள் சருமம் களங்கமற்று மிகவும் அழகாக மாறுகின்றது. சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற சோளமாவு உதவுகின்றது.
இந்த அதிசக்தி வாய்ந்த சோளமாவுடன் மற்ற மூலபோருட்களைச் சேர்த்து பேஸ் பேக் செய்யலாம். இதோ உங்களுக்காக இந்த பதிவு..!
சோளமாவு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு
இந்த பேஸ் பேக் ஒரு தனித்தன்மையான அழகைக் கொடுக்கின்றது. இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கட்டிகள், தழும்புகள் போன்றவை நீக்கப்படுகின்றன. உங்கள் முகத்தை பொலிவாக்கி புத்துணர்ச்சியைத் தருகின்றது.
தேவையான பொருட்கள் :
*1 ஸ்பூன் சோளமாவு
*1 ஸ்பூன் தேன்
*1 ஸ்பூன் மஞ்சள்
*1 ஸ்பூன் பேகிங் சோடா
*சில துளிகள் பன்னீர்
செய்முறை : ஒரு சிறு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவவும். இந்த கலவையை தடவியபின் முகத்தில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். பிறகு மாயச்ச்சரைசர் தடவவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.
சோளமாவு, முட்டை வெள்ளை கரு மற்றும் ஆரஞ்சு சாறு
இளம் வயதில் வயது முதிர்ந்த தோற்றத்துடன் இருப்பவர்களுக்கு இந்த பேஸ் பேக் பெரிதும் கைகொடுக்கும். முகத்தில் தென்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவுகின்றது. இந்த பேக் உங்கள் சருமத்தை பொலிவாக்குகின்றது.
தேவையான பொருட்கள் :
*2 ஸ்பூன் சோளமாவு
*1 முட்டையின் வெள்ளை கரு மட்டும்
*2 ஸ்பூன் ஆரஞ்சு சாறு
*1 ஸ்பூன் தேன்
செய்முறை : மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளவும். முகத்தைக் கழுவி துடைத்த பின், இந்த பேக்கை முகத்தில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு தடவவும். இயற்கையாக முகம் காயும் வரை அப்படியே விடவும். முகம் முற்றிலும் காய்ந்தவுடன், குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் உடனடி பொலிவு உங்கள் முகத்திற்கு கிடைக்கின்றது.
Tags: 2 packs pack corn flour
<<MORE POSTS>>
*மூலிகையாக பயன்படும் காசினிக் கீரை
*ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்
*முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை
<<VISIT OUR OTHER SITES>>