சிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses found massive Syria
உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் அந்த நகரத்தில் பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், வான்தாக்குதல்கள் காரணமாக ரக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
tags :- 1,500 human corpses found massive Syria
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு!
- 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்
- மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு
- ஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்
- ஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி
- சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
- ஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு!
எமது ஏனைய தளங்கள்