ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.150 IS surrendered Afghanistan Terrorists tamil news
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்த நிலையில் அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.
இதுபற்றி வட பகுதி இராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
tags :- 150 IS surrendered Afghanistan Terrorists tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- மரதன் போட்டியில் பதக்கம் வென்ற நாய்!!
- வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த தங்க பாலம்
- மெக்சிகோ விமான விபத்தில் பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்
- பூமியை நெருங்கும் செவ்வாய்
எமது ஏனைய தளங்கள்