இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி தங்களது முதல் இன்னி்ங்ஸில் 474 ஓட்டங்களை குவித்தது.
இந்நிலையில் பதிலுக்கு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, சிவப்பு பந்தை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து வி்க்கட்டுகளை பறிகொடுத்து வந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மொஹமட் சேஷாட் 14 ஓட்டங்களுடனுன் பாண்டியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஜவாட் அஹமடி ஒரு ஓட்டத்துடனும், அப்ஷர் ஷஷி 6 ஓட்டங்களுடனும் இசான் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரெஹமட் சஹா 14 ஓட்டங்களுடன், உமேஷ் யாதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் தங்களது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆரம்பிக்க, தொடர்ந்து விக்கட்டுகள் பறிபோனது.
ஹஸ்மத்துல்லா சஹிடி 11 ஓட்டங்கள், அஷ்ஹர் ஸ்டெனிக்ஸாய் 11 ஓட்டங்கள், ரஷீட் கான் 7 ஓட்டங்கள், அஹமட்ஷாய் பூஜ்ஜியம், முஜிப் உர் ரஹ்மான் 15 ஓட்டங்கள் என தொடர்ந்து ஆட்டமிழக்க, சற்று நிதானமாக ஆடிய மொஹமட் நபி மாத்திரமே 20 ஓட்டங்களை தாண்டினார். இவர் அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற, வபடர் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கட்டுகளையும், இசான் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் பகிர்ந்தனர்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Afghanistan first innings vs India 2018 news Tamil, Afghanistan first innings vs India 2018 news Tamil