வடக்கு கனடாவில் உள்ள நுகர்வோர் அமெரிக்காவின் பொருட்களை நுகர்வதனைத் தவிர்த்து வருகின்றனர். Canadians avoid American Products
நடந்து முடிந்த G7 மாநாட்டினைத் தொடர்ந்துஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்தே கனேடிய கொள்வனவாளர்கள் இவ்வாறு செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கனடிய பிரதமர் தொடர்பாக டிரம்ப் விமர்சித்தமையினை பிரதமர் ட்ரூடோ தமது ஆலோசகர்களை அணுகுவதன் மூலம் இலகுவாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது கனடிய-அமெரிக்க வர்த்தக அழுத்தங்கள் மூலம் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் டிரம்ப் மீதான கோபத்தினை நாங்கள் இவ்வாறு தான் வெளிக்காட்ட முடியும் என்றனர்.
இந்நிலையில் டிரம்பின் தனிப்பட்ட டுவிட்டர் பதிவு நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை பாதித்துவிடுகின்ற நிலை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.