கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 104பேர் உயிரிழப்பு!

0
1601

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,617பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 83ஆயிரத்து 583பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 20ஆயிரத்து 136பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 51ஆயிரத்து 745பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 830பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏழு இலட்சத்து 11ஆயிரத்து 708பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.