பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?

0
2656
tamilnews 2020 president eletion unp sanga gottabaya competition

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய கருத்துக்கள் இப்போதே இலங்கை அரசியலில் முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பற்றி இன்றளவில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் தேர்தல் சட்டம் இலங்கையில் மாற்றம் பெற்றிருப்பதால் அடுத்த முறை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆகவே மகிந்த ராஜபக்ஸவின் அணியில் இருந்து பொதுஜன மக்கள் பெரமுன கட்சியின் சார்பில் அவரின் ஆசீர்வாதத்தோடு கோட்டாபய ராஜபக்ச களமிறங்க உள்ளமையே இங்கு முக்கிய விடயமாக உள்ளது.

இந்தநிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியில் ஒரு வேட்பாளரும், ஐ.தே.கட்சியில் ஒரு வேட்பாளரும், மகிந்த அணியில் ஒரு வேட்பாளரும் களமிறங்க உள்ளனர்.

இதனால் மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீ கொத்தா அரசியல் வட்டாரத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி பல முக்கிய அரசியல் தலைவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியில் கோட்டாபய இறங்கினால் ஐ.தே.க சார்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காராவை களமிறக்குவது” என்ற ரணிலின் முடிவு தான் தென்னிலங்கை அரசியலில் அண்மைய பிரதான தலைப்பாக உள்ளது.

குமார் சங்கக்கார விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவர் இலங்கையில் சட்டமாணி பட்டம் பெற்ற ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்காராவின் தந்தையும் கண்டி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணி ஆவார் அத்தோடு அவர் கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கக்காராவின் தந்தை 83 ஆம் ஆண்டு கலவர நேரத்தில் பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றி கண்டி தமிழர்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குமார் சங்கக்காரா தமிழர்களுக்கு சார்பாக பல இடங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அண்மையில் கூட மே 18 நினைவு நாளில் ருவிற்றறில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இவற்றின் மூலம் தமிழ் மக்களின் செல்வாக்கு சங்காவிற்கு இருப்பதால் அடுத்த தேர்தலில் சங்கா களமிறங்கினால் தமிழர்களின் வாக்கையும் இலகுவாக பெற முடியும் என்று சாணக்கியமாக சிந்திக்கிறது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம்.

அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் சங்காவிற்கு மிகையான செல்வாக்கு இருப்பதால் இலகுவான வெற்றியை பெறலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites