கங்குவா படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விபத்தால் நடிகர் சூர்யா காயம்..!

0
167

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கங்குவா

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பொருள் செலவில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் இந்த திரைப்படம் 38 மொழிகளில், Imax, 3D போன்ற முன்னணி தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை என பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், “கங்குவா” திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

சூர்யாவுக்கு காயம்

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP செட்டில் நடைபெற்று வந்த நிலையில், 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

actor-suriya-got-injured-in-kanguva-shooting-spot கங்குவா படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விபத்து: நடிகர் சூர்யா காயம்