பெருமளவில் அதிகரித்த ரூபாவின் பெறுமதி! இலங்கை பொருளாதாரத்தில் மாற்றம்

0
158

கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19 வீதத்தால் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக Global Promotion International Institute தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி 

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக கணிசமான அளவு அந்நிய செலாவணியை உள்வாங்க முடிந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணம், சுற்றுலா வருமானம் போன்றவற்றின் அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி தடையை தளர்த்துவதன் மூலம் அந்நிய செலாவணி மீதான அழுத்தம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.