8 ஆண்டுகளாக தாயாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்ட மகன்..

0
176

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 25 வயதான ரூடி ஃபரியாஸ் என்பவர் 2015-ல் தனது 17 வயதில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு , ஆர்வலர் குவானெலிடம், ரூடி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆர்வலர் குவானெல் கூறுகையில்,

அமெரிக்காவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞர்; 8 ஆண்டுகளின் பின்னர் தெரியவந்த பகீர் தகவல்! | Mother Son Sexually Abused Us

அப்பாவாக நடிக்க வற்புறுத்து

ரூடியின் தாயார் அவரை ரூடியின் தந்தையாக இருக்கும் வற்புறத்தியிருக்கிறார். ஒரு அடிமையைப் போல வாழ்ந்து சோர்வானதால் 2015-ல் ரூடி வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு 2 நாட்களில் திரும்பி வந்திருக்கிறான்.

அமெரிக்காவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞர்; 8 ஆண்டுகளின் பின்னர் தெரியவந்த பகீர் தகவல்! | Mother Son Sexually Abused Us

திரும்பி வந்த மகனிடம் ரூடியின் தாயார் அவனிடம் ஏதாவது வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார். அவனது தாயார் படுக்கையில் தனது அருகில் படுக்க வைத்து அப்பாவாக நடிக்க வற்புறுத்தியுள்ளார்.

இது பிடிக்காமல், தப்பிப்பதற்காக ஃபரியாஸ் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தனது கணவராக இருந்தாக வேண்டும் என்று தாயார் ஜேனி, ரூடியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது அவனுக்கு போதை மருந்துகளும் அளித்திருக்கிறார். இதனால் பயந்து ரூடி ஃபரியாஸ் பொலிஸாரை நாடாமல் இருந்ததாக தெரிவித்த ஆர்வலர் குவானெல் , இதுவரை ஃபரியாஸிற்கு இந்த பெண் செய்ததை போல் ஒரு தாய் தன் குழந்தைக்கு செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்றார்.

அதோடு அந்த சிறுவனை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்எனவும் தெரிவித்த அவர் குழந்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.