சங்கீத் கன்னத்தில் செல்லமாக தட்டும் மமிதா பைஜூ: சக்சஸ் மீட்டில் வைரலான காணொளி

0
36

மலையாளத் திரைப்படமான ‘பிரேமலு‘ சிறிய முதலீட்டில் தயாராகி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. ஏ.டி. கிரீஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நஸ்லென் கே கபூர், மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், அகிலா பார்க்கவன், ஷ்யாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாப் சலீம், சமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ரொமான்ஸ், காமெடி இவை இரண்டினதும் கலவையாக வெளியான இந்தத் திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இந்தத் திரைப்படம் உலகளாவிய ரீதியல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் படைத்துள்ளது.

இந்த படத்தில் சச்சின் என்ற கதாபாத்திரத்தில் நிஸ்லன், ரீனு என்ற கதாபாத்திரத்தில் மமிதா பாஜு, அமல் என்ற கதாபாத்திரத்தில் சங்கீத் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் நடித்திருந்த நிலையில் இவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டது.

திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமே இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் என சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அண்மையில் ‘பிரேமலு‘ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சக்சஸ் மீட்டில் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜூ இருவரும் ரொமேண்டிக்காக பேசும் வகையிலான ஒரு காணொளி இணையத்தில் வைரவாகி வருகிறது.

காணொளியின் இறுதியில் சங்கீத் கன்னத்தில் மமிதா பைஜூ செல்லமாக தட்டும் ஒரு காட்சி பதிவாகியுள்ளது. குறித்த காணொளியில் இருவரும் நட்பு முறையில் தான் பழகி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை ரசிகர்கள் இருவருக்கும் ரொமான்ஸ் என கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

சச்சினை விட்டுவிட்டு அமலை காதலிக்கிறேன் என்று சொல்லி சச்சினுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி இணையத்தை கலக்கி வருகிறது.

எவ்வாறாயினும் மலையாளத்தில் வௌியான ‘பிரேமம்‘ திரைப்படத்தைப் போல இந்த திரைப்படத்துக்கும் பாரிய ஒரு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டு வருகின்றது.