’13’ அடிப்படையில் அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கும்: எரிக் சொல்ஹெய்ம் நம்பிக்கை

0
58

13வது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டுமென நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தாம் நம்புவதாக” அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை அடித்தளமாக அமைய வேண்டும் எனவும், அதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அந்தந்த மாகாண மக்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும்” எனவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.