கோவிட் மருந்தில் பக்க விளைவா? – முழுமையான விளக்கம்

0
732

கோவிட் மருந்தில் பக்கவிளைவா..?

முதலில் தற்பொழுது வரும் செய்தியின் அடிப்படையில் கூறப்படும் தகவல்களில் 10% மாத்திரமே உண்மை..

உண்மை என்னவென்றால் பிரபல கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நிறுவனம் ஒன்று தமது தடுப்பு ஊசியால் இரத்த உறைதல் சம்மந்தப்பட்டநோய் சில பக்கவிளைவாக வரலாம் என ஒரு வழக்கில் ஒத்துக்கொண்டுள்ளனர். இது உண்மை தகவல் தான் ஆனால் இது ஒரு சாராம்சம் மாத்திரமே!

இதன் முழுமையான விளக்கம் இதுவரையில் எந்த தமிழ் ஊடகமும் குறிப்பாக பெரும்பாலான இந்திய ஊடகங்களில் வெளிவிடவில்லை. குறித்த இந்த வெளிநாட்டு நிறுவனத்தின் தடுப்பூசியே இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட போதிலும் மக்களுக்கு சரியான விளக்கம் கொடுக்காமல் அரைகுறை செய்திகளை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி தமது வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

மேல்நாடு ஒன்றில் 2021 ஆம் ஆண்டு ( குறித்த ஊசி செலுத்தி 7 நாட்களில் ) ஒருவருக்கு நடந்த ஒரு விடயம் இத்தனை வருடங்களின் பின் பேசும்பொருளாகியதற்கு காரணம் சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனம் வழங்கிய வாக்குமூலம்

கொவிட் தடுப்பூசியால் உயிரிழப்பு வருமா..?
அந்த நிறுவனம் கூறியது என்ன..?

2021 மார்ச் மாதமளவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டு
தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டதில் 50 இலட்சம் பெயரில் 30பேர் வரையிலானவர்களுக்கு குறித்த இரத்த உறைவு சம்மந்தமான நோய் வந்துள்ளது. இது பால், வயது , உடலில் உள்ள வேறு நோய்கள் என்பனவற்றின் அடிப்படையில் வருகின்றது

அதாவது ஒரு இலட்சம் பெயரில் அதிக பட்சமாக 4/5 பெயரிக்கு மாத்திரமே இந்த பிரச்சனை வர வாய்ப்பு உண்டு. அதுவும் இவற்றில் உயிர் இழப்பு என்பது பாதிப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையில் 100 பேரில் 2/3 பேர் மாத்திரமே உயிரிழக்க வாய்ப்பு உண்டு

ஆக 0.0001% மாத்திரம் இவ்வாறு கொவிட் தடுப்பூசியால் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு உள்ளது இது தான் சரியான தகவல்.. இது தான் அந்த நிறுவனம் கோர்ட் இல் ஒத்துக்கொண்டதும் கூட..

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நிலமை தடுப்பூசி செலுத்தி 4- 45 நாட்களுக்குள் தான் வர வாய்ப்பு உண்டு… 45 நாட்களுக்குள் 0.0001% சாத்யக்கூறில் வரக்கூடி ஒரு நோயை 3 வருடத்தின் பின் பேசுவது ஏன்..?

மக்களை பதற்றமடைய வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஊடகங்களும், செய்தி பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் வீடியோவில் 15 நிமிடங்களுக்கு மேல் பேசும் யூடியூப் அறிவாளிகளும் கொரோனாவை விட மோசமானவர்களே..

ஒரு சில செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன என்றோ, பிடித்த யூடியூப்பர் கூறுகின்றார் என்றோ எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் நாம் ஒரு முறை உண்மைதன்மையை சரி பார்ப்பது நன்று…

நன்றி