காசாவில் இடம்பெற்ற மனித போரவலத்திற்கு விசாரணை அவசியம்: இலங்கை வலியுறுத்தல்

0
77

காசாவில் உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கை கோரிக்கைவிடுத்துள்ளது.

அத்துடன் அனர்த்தத்திற்கு கவலையும் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதானது “ உணவு, நீர், மருந்து, மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாது மக்கள் அல்லப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, காசா மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறன்றது.

இந்நிலையில் பொதுமக்களை கருத்திற் கொண்டு உடனடி போர்நிறுத்தம் மற்றும் தடையற்ற மனிதாபிமான அணுகல், காசாவுக்கான தனது கோரிக்கையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.

காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் ஆதரவினையும் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் முகவர் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதையும் இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட முயற்சியான “காசாவின் குழந்தைகள் நிதியத்தை” நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

காசாவின் மோதலுக்கு நிலையான அரசியல் தீர்விற்கான உலகளாவிய அழைப்புகளுடன் இலங்கையும் இணைகின்றது. அத்துடன் 1967 ஆம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கிணங்க இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பலஸ்தீனத்தை ஸ்தாபிப்பதை வலியுறுத்துகிறது” எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.