இயற்கையை திருப்பிப்போட்ட விஞ்ஞானம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குளோனிங் ஆட்டுக்குட்டி

0
69

சீனாவில் முதன்முறையாக உயிரணு குளோனிங் முறையில் ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது. குளோனிங் முறையில் பிறந்த முதலாவது ஆட்டுக் குட்டி, 3.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதென இந்த குளோனிங் முறையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்

உயிரணு குளோனிங் முறையில் தற்போது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்டுக் குட்டிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட உயிரணு குளோனிங் முறை கடந்த காலங்களில் நாய், முயல், பசு, பன்றி உள்ளிட்ட பல மிருகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளோனிங் முறை என்றால் என்ன?

உயிரியல்படியெடுப்பு (Cloning) என்பது மரபியல் (Genetical) ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரியல் பொருள்களை படியெடுப்பது (Copy) ஆகும்.

அதாவது உயிரணு மூலக்கூறுகள் (D.N.A), உயிரணுக்கள் (Cells), உயிரணுக் குழுக்கள் (genetical Cell groups) / இழையங்கள் (Tissues) மற்றும் உயிரினங்கள்(living organisms) போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறையாகும்.

ஒரு உயிரியல் பொருளிலிருந்து அதனையொத்த உயிரனு அமைப்பை (genetical makeup) உடையதாய் படியெடுக்கப்பட்டவை படியெடுக்கப்பட்ட உயிரியல்பொருள் (Clone) என்றழைக்கப்படுகிறது.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள்

குளோனிங் என்பது சொமாட்டிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்பர் என்ற முறை மூலம் செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும்.

20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு (டாலி) ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. அதே போன்று முன்னதாக இரண்டு குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர். உயர் விலங்குகள் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் உயிரினம் இதுவாகும்.

அதாவது பாலூட்டிகளில் கை, கால்கள் மற்றும் மனிதர்களை போன்று முன்னோக்கிய கண்கள் கொண்ட அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.