ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை உள்வாங்கும் பூமி: இயற்கையால் புவியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்

0
83

விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால் பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் தரவுகளை ஆராய்ந்து இவர்கள், சூரிய கதிர்வீச்சு பற்றிய முக்கிய உண்மைகளை வெளியிட்டுள்ளனர். 2000 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2023 வரையிலான தரவுகளை அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

சூரியனின் கதிர்வீச்சு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது சில சந்தர்ப்பங்களில் அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெப்ரவரி, மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூமி அதிகளவில் சூரியக் கதிர்வீச்சை உள்வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சிறிதளவு அதிகரித்த கதிர்வீச்சு பெப்ரவரியில் ஒரு சதுர மீட்டருக்கு 3.9 குறியீடாகவும் மார்ச் மாதத்தில் சதுர மீட்டருக்கு 6.2 குறியீடாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் பூமியின் சூரியக் கதிர்வீச்சின் உறிஞ்சுதல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது மேலும் அதிகரிக்கும் எனவும் குறைய வாய்ப்பில்லை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. காரணமாக பூமியின் ஆற்றல் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தும் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பநிலை அதிகரிப்பு, வானிலை மாற்றங்கள், இயற்கை பேரழிவுகள், பனி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.