உலக வங்கியிடமிருந்து $150 மில்லியன் டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை

0
128

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது.

இந்தத் திட்டம் மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தில் (SLDIS) கவனம் செலுத்தி இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறம்பட வைப்புத்தொகை காப்புறுதி திட்டங்களுக்கான சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப SLDIS இன் நிதி மற்றும் நிறுவன திறனை வலுப்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்ட அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் திட்ட வடிவமைப்பிற்கு இணங்க மத்திய வங்கியால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.