உலக வேலைவாய்ப்புகளில் 40% தாக்கத்தை ஏற்படுத்தும் AI

0
193

உலக வேலைவாய்ப்புகளில் 40 சதவீத இடங்களை செயற்கை நுண்ணறிவு திறன் ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு(AI)

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகளிலும் ஆபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலதரப்பட்ட துறைகளில் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு திறன்(AI) பெரிதும் பங்காற்ற கூடியது என எதிர்பார்க்கப்படுகிறது.

40 percentage of world job facing risk from ai india face what kind of struggles, 40 percent of jobs around the world face risk from AI, Artificial intelligence replace jobs and deepen inequality, Artificial intelligence Pros and cons, உலகின் 40% வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் AI : இந்தியாவில் நிலை என்ன?

ஆனால் இவை மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகளை மாற்றியமைப்பதோடு, சமத்துவமின்மையை ஆழமாக்குகிறது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund)சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் உள்ள 40 சதவீத வேலை வாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்தின் கீழ் வருவதாகவும், இதனால் மேம்பட்ட பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, செயற்கை நுண்ணறிவு-வின்(Artificial intelligence) தாக்கம் வளர்ச்சி மற்றும் பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல விகிதங்களில் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

40 percentage of world job facing risk from ai india face what kind of struggles, 40 percent of jobs around the world face risk from AI, Artificial intelligence replace jobs and deepen inequality, Artificial intelligence Pros and cons, உலகின் 40% வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் AI : இந்தியாவில் நிலை என்ன?

மேம்பட்ட மற்றும் வளர்ந்த பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு-வின் தாக்கம் 60% வரையில் இருக்கும் என்று IMF தெரிவித்துள்ளது.

அதைப்போல வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் 40% வரையிலும் செயற்கை நுண்ணறிவு-வின் தாக்கம்  தாக்கமும் இருக்கும் என கூறப்படுகிறது.

குறைந்த வணிக பொருளாதார நாடுகளில் 26% செயற்கை நுண்ணறிவு-வின் விரிவாக்க தாக்கம் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.