உலக அழிவுக்கு இன்னும் 90 வினாடிகள்: மனித இனத்திற்கு டூம்ஸ்டே கடிகாரத்தின் எச்சரிக்கை

0
161

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முடிவுக்கு நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர்.

புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், உக்ரைன் – ரஷ்ய போர், செயற்கை நுண்ணறிவு மற்றும் பருவநிலை மாற்றக் கவலைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தின் முள்ளை மாற்றி அமைத்துள்ளனர்.

அதன்படி, செவ்வாயன்று (23) கடிகாரம் நள்ளிரவுக்கு இன்னும் 90 வினாடிகள் உள்ளவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் முள் நள்ளிரவை மிகவும் நெருங்கிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

புதிய திருத்தங்களுக்கு அமைய டூம்ஸ்டே கடிகார நேரம் தற்போது நள்ளிரவில் இருந்து 90 வினாடிகள் தொலைவில் உள்ளது. நள்ளிரவு ஆனதும் அதுவே உலகின் முடிவைக் குறிக்கும் நாளாக அமையும்.

விஞ்ஞானிகளின் புதிய திருத்தங்களுக்கு அமைவாக அழிவின் விளிம்பில் உலகம் இருப்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.

Oruvan

டூம்ஸ்டே கடிகாரம் என்றால் என்ன?

உலகின் அழிவு தொடர்பாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுடைய செயற்பாடுகள் காரணமாக இந்த உலகில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான காரணங்களினால் நமது உலகமானது அழிவை நோக்கி பயணித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் உலககின் அழிவை கணக்கிடுவதற்காக விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் உருவாக்கப்பட்டது தான் டூம்ஸ்டே கடிகாரம்.

உருவாக்கம்

1947 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் டூம்ஸ்டே கடிகாரம் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காக சிக்காகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் இந்த கடிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டை உருவாக்குவதற்கான குறியீட்டுப் பெயரான மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் குழுவால் அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் நிறுவப்பட்டது.

முதலில், அணுசக்தி அச்சுறுத்தல்களை அளவிடுவதற்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது, ஆனால் 2007 இல் புல்லட்டின் அதன் கணக்கீடுகளில் காலநிலை மாற்றத்தை சேர்க்க முடிவு செய்தது.

கடந்த 77 ஆண்டுகளில், மனித இனம் முழு அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்து கடிகாரத்தின் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் ஒவ்வொரு ஆண்டும் புல்லட்டின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு வாரியத்தின் நிபுணர்களால் அதன் ஸ்பான்சர் வாரியத்துடன் கலந்தாலோசித்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது ஒன்பது நோபல் பரிசு பெற்றவர்கள் உள்ளனர்.

Oruvan

கடிகாரத்தின் அமைப்பு

இந்த கடிகாரத்தில் 4 புள்ளிகள் மட்டுமே இருக்கும். இதில் மேலே இருக்கும் புள்ளி நள்ளிரவை குறிக்கும். கீழே இருக்கும் புள்ளி காலை நேரத்தை குறிக்கும்.

இதில் கடிகார முழு நடு இரவை நெருங்க நெருங்க அது அழிவை குறிக்கும். இரவு புள்ளிக்கு அருகில் முள் செல்ல செல்ல அது அழிவை குறிப்பதற்கான காரணம் ஆகும்.

(இந்த முள் ஆராய்ச்சியாளர்களினால் நகர்த்தப்படும்)

உலகில் நடக்கும் மோதல்கள், பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைப்பார்கள்.

உலகம் அழிவை நோக்கி செல்கிறது, முக்கியமாக அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதும் பட்சத்தில் இந்த முள்ளை இரவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வைப்பார்கள்.

Oruvan

முள் முன்னதாக நகர்த்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள்

ஒவ்வொரு ஜனவரியிலும் டூம்ஸ்டே கடிகாரத்தை மதிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னர் பல முறை முள்ளை விஞ்ஞானிகள் இரவு நேரத்தை நோக்கி நகர்த்தி உள்ளனர்.

ஜனவரி 2023 இல், டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவுக்கு 90 வினாடிகளுக்கு மாற்றப்பட்டது – 1947 இல் கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவே நள்ளிரவுக்கு மிக அருகில் மாற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.

கடிகாரம் 1947 இல் கடிகாரம் நள்ளிரவுக்கு 90 வினாடிகளே உள்ளதாக மாற்றப்பட்டது. இதுவரை இந்த முள் (1947-2023) 24 தடவைகள் மாற்றப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டில், பனிப்போர் தணிந்த நிலையில் கடிகாரத்தின் முள் நள்ளிரவுக்கு 17 நிமிடங்களாக மாற்றப்பட்டது. இதுவே கடிகாரம் பேரழிவிலிருந்து தொலைத்தூரத்துக்கு சென்ற சந்தர்ப்பமாகும்.

Oruvan

டூம்ஸ்டே கடிகாரத்தின் நோக்கம்

கடிகாரத்தின் நோக்கம் நாம் எந்த அளவு தூரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவது ஆகும். இந்த கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லது அல்ல என்றும் அனைத்து நாடுகளும் இதை உணர்ந்து மனித குளத்தின் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கிரகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டும் போது கடிகாரம் ஒரு பயனுள்ள விழிப்பு அழைப்பாக இருந்தாலும் சிலர் அதன் பயனைக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடிகாரத்தின் நேரம் அச்சுறுத்தல்களை அளவிடுவதற்கு அல்ல மாறாக உரையாடலைத் தூண்டுவதற்கும் காலநிலை மாற்றம் மற்றும் அணு ஆயுதக் குறைப்பு போன்ற அறிவியல் தலைப்புகளில் பொது ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் ஆகும்.