இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்தில் சிக்கி பலி..! குவியும் அரசியல்வாதிகள்

0
168

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர்: ராகம வைத்தியசாலையில் குவியும் அரசியல்வாதிகள் | State Minister Sanath Nishant Died In The Accident

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர்: ராகம வைத்தியசாலையில் குவியும் அரசியல்வாதிகள் | State Minister Sanath Nishant Died In The Accident

இந்நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள்,உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக ராகம போதனா வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     

இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

நெடுஞ்சாலையில் விபத்து

அந்த அறிக்கையில் இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.

மகிந்த விசுவாசி

சாரதி மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார். கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோர விபத்தில் பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல் | Sanath Nishantha And Another Reported Dead

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்நிலை சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டதுடன் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியாகும். 

மின்சார கட்டணம்

கடந்த கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்டி வெடித்த நிலையில், ஆட்சியில் இருந்து ராஜபக்சர்கள் விரட்டப்பட்டனர்.

கோர விபத்தில் பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல் | Sanath Nishantha And Another Reported Dead

இதன்போது காலி முகத்திலிடலில் பெரும் வன்முறை சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை உயிரிழந்த சனத் நிஷாங்கவே முன்னெடுத்திருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ராஜபக்ஷர்களின் தீவிர விசுவாசியான அவர், மின்சார கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்த நாமல் ராஜபக்சவையும் காப்பாற்றியிருந்தார். பல மாதங்களாக செலுத்தாத மின்சார கட்டணத்தை பல மில்லியன்களில் செலுத்தியிருந்தார். 
Gallery