விண்வெளியில் ஈரமான துண்டை பிழிந்தால் என்ன ஆகும்.. (video)

0
215

விண்வெளிக்கு செல்வது என்பது மனிதர்களுக்கு எப்போதும் ஒரு சிலிர்ப்பான அனுபவம் என்ற நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தற்போது மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் தயாராகி வருகிறது.

விண்வெளி வீரர்களின் சாகசங்கள்

சமீபத்தில் தான் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த இளம் விண்வெளி வீரர் ஒருவர் தமது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினார். பொதுவாக விண்வெளி வீரர்களின் சாகசங்கள் பிரமிக்க வைப்பதாக இருக்கும்.

அப்படியான ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த காணொளியானது 2013ல் வெளியானது என்பதுடன், தற்போது ஓய்வுபெற்றுள்ள கனேடிய விண்வெளி வீரர் Chris Hadfield என்பவர் அதில் ஈரமான துண்டை பிழிந்து என்ன நடக்கும் என்பதை விளக்கியிருந்தார்.

அந்த காணொளியில், ஈரமான துண்டை அவர் நன்றாக பிழிந்து அதிலிருந்த நீரை வெளியேற்றுகிறார். ஆனால் அந்த தண்ணீர் ஒருவகை ஜெல் போன்று மிதக்கிறது. அந்த 30 நொடிகள் கொண்ட காணொளி பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது. அந்த காணொளி வெளியான போதே பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.