குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்னும் நிலையில் உக்ரைன்..

0
190

உக்ரைன் போர், பல்வேறு நாடுகளில் பல்வேறு விதத்தில் தாக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில், உக்ரைனில் எதிர்கால சந்ததி உருவாவதையே அது கேள்விக் குறியாக்கியுள்ளது. ஆம், குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்று சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள் உக்ரைன் நாட்டவர்கள்.

கர்ப்பிணிகளும் குழந்தை பெற்றவர்களும் சந்தித்த திகிலூட்டும் அனுபவம்  

நான் அதிகாலை 2.00 மணிக்கு எழுந்து என் குழந்தை மியாவுக்குப் பாலூட்டுவேன், சிறிது நேரத்தில் air-raid சைரன்கள் ஒலிக்கத் துவங்கும், இது என் அன்றாட நடவடிக்கை என்கிறார் யுலியா (Yuliya Balahura, 38).

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மழை பொழியத் துவங்கிய நேரத்தில் யுலியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

பூமிக்கடியிலுள்ள ஒரு கட்டிடத்தில் மியாவுடன் தனது முதல் இரவை யுலியா செலவிட்ட அதே நேரத்தில், அங்கு பல பெண்கள் பிரசவித்துக்கொண்டிருந்தார்கள்.

காதைக் கிளிக்கும் சைரன் ஒலியும், குண்டு வெடிப்பு சத்தமும் திகிலையூட்டிய நிலையிலும், செவிலியர்கள் அவர்களை அமைதிப்படுத்தி, தங்களாலான உதவிகளைச் செய்தார்கள் என்கிறார் அவர்.

குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்னும் நிலையை உருவாக்கியுள்ள உக்ரைன் போர் 

போர் துவங்கியதிலிருந்தே, உக்ரைனில் குழந்தை பிறப்பு வீதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. பல்லாயிரக்கணக்கன ஆண்கள் போருக்குச் சென்றுவிட்டார்கள். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சில இளம்பெண்களும் தன்னார்வலர்களாக போருக்குச் சென்றுள்ளார்கள். மூன்று முதல் நான்கு மில்லியன் பேர் போலந்து, ஜேர்மனி மற்றும் பிரித்தானியா முதலான நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள்.

ukraine/உக்ரைன்

அந்த பெண்களில் பலர் இந்த தாய்மை அடைந்திருக்கவேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. போர் முடிந்தபின், அவர்கள் உக்ரைனுக்குத் திரும்புவார்களா திரும்பமாட்டார்களா தெரியாது. சில பெண்களுடய கணவர்கள் தங்கள் மனைவிகளுடன் ஏதாவது ஒரு வெளிநாட்டில் இணைந்துகொள்ளலாம். சில குடும்பங்கள் பிரியலாம் என்கிறார், சமூக அறிவியல் மற்றும் மக்கள்தொகை தொடர்பிலான நிபுணர் Oleksandr Hladun.

பல்வேறு விதமான எண்ணங்கள் 

போர் தாம்பத்ய வாழ்வு, குடும்ப வாழ்வு என பல பகுதிகளில் பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மக்களிடையே பலவித எண்ணங்கள் காணப்படுகின்றன.

வயதாகிக்கொண்டே போகிறது, போரைக் கருதி இப்போது குழந்தை பெறவில்லையானால், பின்னர் அதற்கு தாமதாகிவிடலாம் என கருதுகிறார்கள் Halya Rudyk, Kostia Nechyporenko தம்பதியர்.

ukraine/உக்ரைன்

போர் துவங்குவதற்கு சில வாரங்கள் முன் திருமணமான Iryna Melnychenko, தன் கணவர் போருக்குச் சென்றதும், தான் தன் கணவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்கவில்லையே, அவரது குழந்தையைக் கொஞ்ச முடியாமல் போய்விட்டதே என கவலைப்பட்டதாகவும், பிறகு, போர்க்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால், ஒருவேளை குழந்தைக்கு தான் மட்டுமே பெற்றோராக இருக்கும் ஒரு நிலை உருவாகிவிடுமோ என சிந்திக்கத் துவங்கியதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக, மொத்தத்தில், குழந்தை பெற்றுக்கொள்வதைக் குறித்தே தம்பதியரை யோசிக்கவைத்துவிட்டது ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போர்!