ஆண் குழந்தைக்கு தந்தையான ’பரிதாபங்கள்’ சுதாகர்!

0
102

யூடியூப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் திரைதுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் முக்கியமானவர்கள் சுதாகர் – கோபி இணை.

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனல் மூலம் இருவரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்கள். யூடியூப் தளத்தில் கலக்கி வந்த இந்த இருவரும் தற்போது வெள்ளித்திரையில் நுழைந்துள்ளனர்.

Sudahakar

இவர்கள் இருவரும் சேர்ந்து படம் ஒன்றை எடுத்து அண்மையில் முடித்துள்ளனர். ஆனால், இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், நடிகர் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகனுடன் சுதாகர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளம் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.