கதறி அழுத பெண்ணின் சத்தம்; விசாரிக்க சென்ற பொலிஸாருக்கு ஆச்சர்யம்!

0
201

பிரிட்டனின் கேன்வி தீவைச் (Canvey Island) சேர்ந்த நபர் ஒருவர் அவரது குடியிருப்பு வட்டாரத்தில் பெண் ஒருவர் கதறி அழுதுகொண்டிருந்ததைக் கேட்டுக் காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார்.

அந்த தகவலை அடுத்து காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குச் சென்றடைந்த பின்னரே கதறி அழுதது பெண் அல்ல என்றும் அது கிளி என்றும் அவர்களுக்குத் தெரிய வந்தது.

கதறி அழும் பெண்ணின் சத்தம்; விசாரிக்க சென்ற பிரிட்டன் பொலிஸாருக்கு ஆச்சர்யம்! | The Sound Crying Woman Police Investigate Shocked

கதறி அழுத கிளி

அதேவேளை கதறி அழுத கிளிக்குச் சொந்தக்காரரான ஸ்டீவ் வூட் (Steve Wood) சுமார் 21 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வருவதாக கூற்றப்படுகின்றது.

எனினும் கிளி வழக்கத்திற்கு மாறாக அன்று சத்தம் போட்டுக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். ஸ்டீவின் வீட்டு வாசலில் வந்து நின்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளை கண்ட ஸ்டீவ் தாம் ஏதும் தவறு செய்து விட்டோமா என அஞ்சினார்.

“இங்குப் பெண் ஒருவர் உதவிக்காகக் கதறி அழுதுகொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனை ஆராய வந்தோம். ஆனால் பயப்பட ஒன்றும் இல்லை காவல் துறையினர் தெரிவித்தனராம்.