13வது திருத்தச் சட்டத்தில் இந்தியாவின் பங்கு என்ன…! யாழில் கலந்துரையாடல்

0
196

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – அதில் இந்தியாவின் பங்கு பற்றிய கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று (15.07.2023) இடம்பெற்றுள்ளது. “இந்த கலந்துரையாடலுக்கு செல்வேன்” எனக் கூறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

கட்சியில் குழப்ப நிலை

ஆனால் குறித்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் கட்சியில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக கலந்துரையாடலுக்கு செல்லாமல் விட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் இந்தியாவின் பங்கு என்ன..! யாழில் கலந்துரையாடல் (Photos) | India Role In 13Th Amendment Act Jaffna Discussion

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சி.தவராசா,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பூ.பிரசாந்தன், ஆகிய இவர்களோடு,

இலங்கைத் தமிரசுக் கட்சி சார்பாக நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன், சமத்துவக் கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம், இராஜநாதன் பிரபாகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதி பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.