நாள்தோறும் ஒரு பறவைகள் படம் வரையும் கனடிய பெண்!

0
175

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாள்தோறும் பறவை ஒன்றின் படத்தை வரைந்து வருகின்றார்.

ஒன்றாரியோவின் கிட்ச்னர் பகுதியைச் சேர்ந்த மெர்டிரித் புளுன்ட் என்ற பெண் இவ்வாறு நாள்தோறும் பறவை படங்களை வரைந்து வருகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பமானது முதல் இதுவரையில் தொடர்ச்சியாக அவர் இவ்வாறு பறவைகளின் படத்தை வரைந்து வருகின்றார். இந்த ஓவியங்கள் இணையத்தில் பிரபல்யம் பெற்று வருகின்றன.

கடந்த ஆண்டில் சுகாதார பிரச்சனைகளை எதிர் நோக்கி மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், இந்த ஆண்டில் தனக்கு ஏற்பட்ட அழுத்தங்களில் இருந்து விடுபடும் நோக்கில நாள்தோறும் பறவைகளின் படத்தை வரைந்து வருகிறார்.

பென்சில், நீர்ச்சாயம் மற்றும் மை ஆகியனவற்றைக் கொண்டு இவர் படங்களை வரைந்து வருகின்றார்.

பறவைகள் மீது அலாதியான பிரியம் காணப்படுவதாகவும் இந்த ஆண்டின் 365 நாட்களிலும் பறவைகள் படத்தை வரைவதற்கு விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பிராந்தியத்தில் 310 பறவை இனங்கள் காணப்படுவதாகவும் அவர் அவற்றின் ஓவியங்களை தீட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பறவை ஒன்றின் படத்தை வரைந்து நிறம் தீட்டுவதற்கு 30 நிமிடங்கள் முதல் சில மணித்தியாலங்கள் வரையில் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.