செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்! நொடியில் பறிபோன உயிர்..

0
337

சென்னையில் பெண் ஒருவர் பவர் பேங்கில் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய நிலையில், திடீரென மின்சாரம் தாக்கிய உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் பேசி உயிரிழந்த பெண்

சென்னை, தாம்பரம் அடுத்த திருநீர்மலை சாலையில் உள்ள விடுதி ஒன்றில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற இளம்பெண் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் போன் பேசிக்கொண்டிருந்த அந்த இளம்பெண், பவர் பேங்கில் போனை இணைத்தபடி பேசிக் கொண்டிருந்தார். குறித்த விடுதி கட்டிடத்திற்கு அருகே உயர் மின்அழுத்த கம்பி சென்றுள்ள நிலையில், அவரது ஆடை மின்சார கம்பியில் பட்டுள்ளது.

அதனை எடுப்பதற்கு இரும்பு கேட்டில் ஏறி முயற்சித்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து, செல்போன் வெடித்து சிதறியுள்ளது. மேலும், அங்கு தங்கியிருந்த பூனம் (20), ஊர்மிளா குமாரி(24) என்ற பெண் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

பின்பு மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, காயமடைந்து கிடந்த 3 பெண்களையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இதில் குமாரி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தகவலறிந்த பொலிசார் குறித்த விடுதி உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.