கோலாகலமாக இடம்பெற்ற நாய்களின் திருமணம்.. வைரலாகும் வீடியோ!

0
30

பொதுவாகவே திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வாகும்.

அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாய்களுக்கும் தான் என நாய்களுக்கு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம்

இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் ஆண் நாய்க்கும் பெண் நாய்க்கும் திருமணம் செய்ய அதன் உரிமையாளர் முடிவெடுத்திருக்கிறார்.

இந்நிலையில் ஆண் நாயான டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் செய்துள்ளனர்.

டாமி மற்றும் ஜெல்லியின் திருமணம் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 அன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த மணமக்களுக்கு மாலை அணிவித்து, திலகம் வைத்து இரு உரிமையாளர்களும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு ஆட்டம் பாட்டம் என கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோலாகலமாக இடம்பெற்ற நாய்களின் திருமணம்: எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ! | Dog Wedding Performed With All Rituals In India

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.