நிச்சயதார்த்த மோதிரத்துடன் வந்த அம்பானி வீட்டு நாய்! (வீடியோ)

0
39

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், நேற்று அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிலையில், இவர்களது நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டுவந்தது குறித்த சுவாரசிய காட்சி வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்கும் நேற்று பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்தனர். ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார்.

ஆனந்த அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக பணியாற்றினார், இவர் தற்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டு வந்த விருந்தினர் யார் தெரியுமா? வைரல் காணொளி இதோ | Ringbearer Anant Ambani Radhika Merchant

நிச்சயதார்த்தத்தில் சுவாரசியம்

முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், திருமண மோதிரத்தை கொண்டு வந்த அவரது செல்ல நாயின் காணொளி வைரலாகி வருகின்றது.

ஆம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் செல்ல நாய் நிச்சயதார்த்த மோதிரத்தை சர்ப்ரைஸாக கொண்டு வந்துள்ளது.