உக்ரைன் நோட்டோவில் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் நிச்சயம்; ரஷ்யா எச்சரிக்கை!

0
409

உக்ரைன் நோட்டோவில் இணைவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) எச்சரித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை தன்னுடன் இணைத்து கொண்டாதாக ஜனாதிபதி புடின் (Vladimir Putin) அறிவித்தார்.

ஜனாதிபதி புடினின் (Vladimir Putin) இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவுடன் உறுப்பினர் ஆவதற்கான ஆச்சரியமான முயற்சியை அறிவித்தார்.

மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவுடன் இணைவதற்கான எண்ணத்தை உக்ரைன் முதல்முறையாக வெளிப்படுத்திய போதே ரஷ்யாவின் போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைனை நேட்டோவில் அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) இன்று காலை மாநில டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அத்துடன் இத்தகைய நடவடிக்கையானது மூன்றாம் உலகப் போருக்கு உத்திரவாதமாக விரிவடைவதை குறிக்கும் என்பதை உக்ரைன் நன்கு அறிவார்கள் எனவும் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) கூறியதாக டாஸ் மேற்கோளிட்டுள்ளது.

மேலும் உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் மேற்குலகம் ரஷ்யாவுடன் நேரடியாக எதிர்கொள்ளும் என்ற ரஷ்ய கருத்தையும் வெனெடிக்டோவ் மீண்டும் வலியுறுத்தினார். உக்ரைன் நோட்டோவில் இணைவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) எச்சரித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை தன்னுடன் இணைத்து கொண்டாதாக ஜனாதிபதி புடின் (Vladimir Putin) அறிவித்தார்.

ஜனாதிபதி புடினின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவுடன் உறுப்பினர் ஆவதற்கான ஆச்சரியமான முயற்சியை அறிவித்தார்.

மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவுடன் இணைவதற்கான எண்ணத்தை உக்ரைன் முதல்முறையாக வெளிப்படுத்திய போதே ரஷ்யாவின் போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைனை நேட்டோவில் அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) இன்று காலை மாநில டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அத்துடன் இத்தகைய நடவடிக்கையானது மூன்றாம் உலகப் போருக்கு உத்திரவாதமாக விரிவடைவதை குறிக்கும் என்பதை உக்ரைன் நன்கு அறிவார்கள் எனவும் வெனெடிக்டோவ் கூறியதாக டாஸ் மேற்கோளிட்டுள்ளது.

மேலும் உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் மேற்குலகம் ரஷ்யாவுடன் நேரடியாக எதிர்கொள்ளும் என்ற ரஷ்ய கருத்தையும் வெனெடிக்டோவ் (Alexander Venediktov) மீண்டும் வலியுறுத்தினார்.