இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் பரிஸ் கண்காட்சி!

0
96

இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த பரிஸ் கண்காட்சி (Foire de Paris) இவ்வருடம் இடம்பெற உள்ளது.

இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த கண்காட்சி ஆரம்பித்துள்ளது. வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை 12 நாட்கள் கண்காட்சி இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Versailles அரங்கில் இந்த கண்காட்சி இடம்பெற உள்ளது.

இதில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 1,250 வர்த்தகர்கள் இதில் பங்கேற்கின்றனர். இது 116 ஆவது முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020, 2021 வருடங்களில் கண்காட்சி இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.