உக்ரைனுக்கு சென்றதால் இங்கிலாந்து பிரதமருக்கு நேர்ந்த சிக்கல்!

0
488

அண்மையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியை( Volodymyr Zelenskyy ) நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 50 நாட்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய படை பலம் கொண்ட ரஷ்யா போரை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உக்ரைனை தன்வசமாக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் வீரர்களின் பதில் தாக்குதல்களால் ரஷ்ய படைகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நிதி உதவி ஆயுத உதவி அளிப்பதால் உக்ரைனும் ரஷ்யாவிற்கு கடும் சவால் அளித்து வருகின்றன.

இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுதங்கள் வழங்கி வருவதோடு, அண்மையில் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த சூழலில் தான் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.