பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – ஓ.பி.எஸ்

0
342

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கிறஞர் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.