அடர்ந்த காட்டுக்குள் தவறிய குழந்தை 3 நாட்களின் பின்பு மீட்பு

0
284
child failed forest rescued after 3 days tamil news

ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதியினை சுற்றிப்பார்க்க சென்ற போது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல் போய்விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடினார்கள். 3 நாட்கள் ஆகியும் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை. child failed forest rescued after 3 days tamil news

இந்த நிலையில் 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குழந்தை காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அருகில் தண்ணீர் குட்டை ஒன்று இருக்க அதன் அருகில் உள்ள பாறையில் அந்த குழந்தை அமர்ந்திருந்தது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை 3 நாட்களும் அருகில் இருந்த குட்டையில் தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளது. ஜப்பானில் தற்போது கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. இந்த நிலையிலும் காட்டுக்குள் தாக்குபிடித்து 3 நாட்களாக இருந்துள்ளான்.

வெயில் காரணமாக அவனது உடலில் நீர்சத்து குறைந்து இருந்தது. காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் ஆங்காங்கே அவனது உடலில் கீறல்கள் ஏற்பட்டு இருந்தன. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-

நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. இந்த பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடுவது இல்லை. எனவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தை என்று தெரிந்தது. அதை பார்த்ததும் என் இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன் எனக் கூறினார்.

தற்போது குழந்தைக்கு வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

tags ;- child failed forest rescued after 3 days tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்