எந்திரன் கதை வழக்கு – ஷங்கர் புதிய மனு தாக்கல்

0
295
Directot Shankar reappeal enthiran movie issues tamil news

சென்னை, உயர்நீதிமன்றத்தில் ‘எந்திரன்’ பட கதை சிக்கல் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். Directot Shankar reappeal enthiran movie issues tamil news

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பிரதான கதாபத்திரத்தில் நடித்து ஷங்கர் இயக்கிய படம் ‘எந்திரன்’. இப் படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் கூறி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த எந்திரன் படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். இயக்குநர் ஷங்கர் அக் கதையை எனது அனுமதி இன்றி எந்திரன் படமாக எடுத்துள்ளார். இதற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்‘ எனக் கோரினார்.

நீதிபதி அந்த வழக்கை விசாரித்து, ‘இயக்குநர் ஷங்கரை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவும், மனுதாரரின் வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவும் , இவை அனைத்தையும் ஆகஸ்ட் 8ம் திகதிக்குள் முடிக்க வேண்டும்‘ எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, தற்போது இயக்குனர் ஷங்கர் புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், “என்னுடைய ‘எந்திரன்’ படத்துக்கும், மனுதாரரின் கதைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மேலும் எனது கதையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எந்திரன் திரைப்படத்தின் கதையை முத்திரையிடப்பட்ட உறையில் பதிவு செய்திருந்தேன். இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என கோரியுள்ளார்.

இவரின் விசாரணை விரைவில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

tags :- Directot Shankar reappeal enthiran movie issues tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்