ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை

0
735
Heroin drug selling ez cash mode

தொலைபேசி மற்றும் மின்விளக்கு கம்பங்களில் ஹெரொயின் போதைப்பொருள் பாக்கெற்றுக்களை ஒட்டிவைத்து, ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Heroin drug selling ez cash mode)

சுமார் 13 இலட்சம் ரூபாவுக்கு அதிக மதிப்புடைய போதைப்பொருள் மற்றும் பணத்துடனும் குருவிட்ட பிரதேசத்தில் வைத்து, கடந்த 05 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஹெரொயின் போதைப்பொருள் 100 கிராம் 340 மில்லிகிராம் மற்றும் 51,000 ரூபா பணமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவிசாவளையில் இருந்து எம்பிலிபிட்டிய வரை ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் நபர் ஒருவர், குருவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருப்பதாக திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி தேடுதல் மேற்கொண்ட பொலிஸ் குழுவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரொயின் போதைப்பொருள் பாக்கெட்டுகளை மின்கம்பங்கள் மற்றும் ஆட்கள் இல்லாத இடங்களில் ஒட்டுவதன் மூலமும், ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருளை கோரும் நபர்களுக்கு இந்த பொருளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு தொலைபேசி மற்றும் மின்விளக்கு கம்பங்களில் ஒட்டி வைப்பதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மித்தெனிய, திவுலம்பிடிய, பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Heroin drug selling ez cash mode