வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்

0
786
fisherman's boat fire Vadamaratchchi

வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் படகு ஒன்றுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. (fisherman’s boat fire Vadamaratchchi)

கடற்தொழிலை மேற்கொண்டுவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே இவ்வாறு இனந்தெரியாத விஷமிகளால் எரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் தாளையடி பகுதியில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில், தென்பகுதி மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தமிழ் மீனவர்களின் படகுகள் எரியூட்டப்பட்டும், பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; fisherman’s boat fire Vadamaratchchi