இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வு வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு அவசியம்! – சந்திரிக்கா வலியுறுத்தல்

0
416
solution crisis situation Sri Lanka necessary constitutional amendment

(solution crisis situation Sri Lanka necessary constitutional amendment)

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாயின் அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு ஒன்று அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 10 ஆவது தேசிய மதங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுகின்றன.

முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமாயின் நாட்டில் வாழும் அனைவருடைய பன்மைத்துவ அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

(solution crisis situation Sri Lanka necessary constitutional amendment)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites