இந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்

0
833
07 Indian fishermen arrested boat confiscation

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். (07 Indian fishermen arrested boat confiscation)

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் இராட்சத ரோந்து படகு மோதியதில் சிறைப்பிடிக்கப்பட்ட படகு ஒன்று முற்றிலும் சேதமான நிலையில், காரைநகர் கடற்படை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மீன்வளதத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 07 Indian fishermen arrested boat confiscation