அமெரிக்காவின் ஒருதலைபட்சம் வர்த்தகப்போரிற்கு வழிவகுத்தது- பிரான்ஸ் அமைச்சர்!

0
312
United States's unilateral trade led French minister

வர்த்தகபோர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். United States’s unilateral trade led French minister

ஆர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

தன் நாட்டினைப்பற்றி மட்டுமே யோசிக்கும் வகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் ப்ரூனோ தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து, போட்டியிட அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த வாரம் இது தொடர்பாக பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தில் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 500 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்காவிற்கு வரும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உலகின் சிறந்த பொருளாதாரம் கொண்ட முதல் 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு பிரான்ஸ் அமைச்சர் தெரிவிக்கும்போது:

தன்னை மட்டுமே யோசித்தால், அதனடிப்படையில் இவ்வுலகில் வர்த்தகம் இயங்காது என்று குறிப்பிட்ட அமைச்சர் ப்ரூனோ, வருங்கால சர்வதேச சந்தைக்கு இது ஒத்துவராது என்று தெரிவித்தார்.

இவ்வாறு இருப்பது, வளர்ச்சியை குறைத்து, பலவீனமான நாடுகளை மிரட்டுவதுபோல உள்ளதாகவும், இதனால் அரசியல் ரீதியான பல விளைவுகள் ஏற்பட கூடும் என்றும் அவர் கூறினார்.

வர்த்தக போர் என்ற ஒன்று தற்போது உண்மையாகிவிட்டதாக ப்ரூனோ தெரிவித்தார். மேலும், எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா திரும்பப் பெறாத வரை, அந்நாட்டுடன் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் முனையாது என்றும் அவர் கூறினார்.

tags :- United States’s unilateral trade led French minister

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்