யாழில் பொது நிகழ்வை பாதியில் விட்டு கூட்டமைப்பு எம்பிக்கள் எங்கே ஓடினார்கள் தெரியுமா?

0
482

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வைத்து நேற்று தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. TNA MPs Bad Behaviour Teachers Appointment Function

இந்த நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,கல்வி அமைச்சர் அகிலவிராச், நிதியமைச்சர் மங்கள சமரவீர உட்பட நிறைய அமைச்சர்களும் கூட்டமைப்பு எம் பி மார்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் ,சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சரியாக காலை 10.30 இற்கு ரணில் நிகழ்வுக்கு வந்து சேர்ந்தார் நிகழ்வு தொடங்கியதும் எல்லோரும் ரணிலுக்கு பக்கத்தில வருவதற்கு முண்டியடித்து தள்ளுப்பட்டு ஒருவாறு முன்வரிசை ஆசனங்களில் உட்காந்து கொண்டனர்.

முக்கிய அதிதிகள் உரையாற்றி முடிந்தவுடன் முதல் 10 பேருக்கு ரணில் நியமனக்கடிதங்களை வழங்கிவிட்டு தான் போகப்போறேன் மிகுதியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விழா ஏற்பாட்டுக்குழுவிடம் சொல்லிவிட்டுச் கிளம்பினார்.

பிரதமர் ரணிலும்,அமைச்சர்களும் கிளம்பிய மறுகணமே முன்வரிசை ஆசனங்களில் இருந்த கூட்டமைப்பு எம்பிமார்,மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினரகள்,தவிசாளரகள் என்று எல்லோருமே அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர்.

நிகழ்வு அத்துடன் முடிந்து விட்டதோ என்று எண்ணும் வண்ணம் அவர்கள் புறப்பட்டு சென்றதும் அந்த நிகழ்வில் யாருமே இல்லை என்னும் அளவுக்கு சோபை இழந்து காணப்பட்டது.

இவர்கள் எல்லோரும் எங்கே இவ்வளவு அவசரமாக புறப்பட்டு செல்கின்றனர் என்பதை அறிந்து கொண்ட போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஒரு சமூக பொது நிகழ்வை பாதியில் விட்டுவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் ஆகிய தனியார் ஒருவரின் உணவு நிலையம் ஒன்றின் திறப்பு விழாவுக்கே இவர்கள் இவ்வளவு அவசரமாக சென்றுள்ளனர்.



இது தொடர்பில் இவர்களின் பொறுப்பற்ற தன்மை தொடர்பில் பலரும் தமது விசனங்களை முன்வைத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites