75 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு; வடிவமைக்கப்பட்ட பெண்ணின் முகம்!

0
40

ஈராக் நாட்டில் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் இருந்து பழமையான உடைந்த மண்டை ஓட்டை கடந்த 2018-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 

ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட மண்டை ஓடு சுமார் 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன. அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.

பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள் நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.