விஜயகலாவின் கருத்துக்கு அரசியல் நோக்கமே காரணம் – சாந்த பண்டார குற்றச்சாட்டு

0
337
tamil news vijeyakala planning political stable shantha bandara

(tamil news vijeyakala planning political stable shantha bandara)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அரசியல் இருப்பிற்காக சுயநல நோக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கூறியதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“விஜகலா மகேஸ்வரனின் மேடைக் கருத்து உண்மையாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் நன்மைக்காக வெளியிடப்பட்ட ஒன்றல்ல.

வட பிரதேசத்துக்கும் வடக்கு மக்களுக்கும் சேவை புரிவதற்காகவும் அல்ல.

தனது அரசியல் பணிகளுக்காகவும், தேர்தல்களின் போது மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு அதன் இருப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே அவர் அந்த கருத்தை முன்வைத்தார்.

வடக்கு பிரதிநிதிகள் பிரபாகரன் மீண்டும் வர வேண்டும் என குறிப்பிட்டவுடன் தெற்கிலுள்ள பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க எதிர்ப்பார்க்கின்றனர்.

இத்தகைய செயற்பாடுகளின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது.

எனவே, விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பொய்யானது.

எவ்வாறாயினும், அரசியலமைப்புக்கு மாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் முடியாது” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

(tamil news vijeyakala planning political stable shantha bandara)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites