பிரிக்க முடியாத இலங்கை நாட்டுக்குளேயே தீர்வு வேண்டும்! மீண்டும் வலியுறுத்திய இரா சம்பந்தன்!

0
384
TNA Leader Sambanthan American Ambassador Meeting

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி பிரியாவிடை பெற்றுச் செல்லும் தூதுவர்
அதுல் கேஷாப் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான
இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்
சந்தித்து கலந்துரையாடினார். TNA Leader Sambanthan American Ambassador Meeting

நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள்
சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும்
நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அதேவேளை, இலங்கை மக்களின் நலனை
அடிப்படையாக கொண்ட சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசு பூரணமாக
நிறைவேற்றாமல் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மிக தாமதமாக ஸ்தாபிக்கப்பட்டதனையும்,
நஷ்டஈடு தொடர்பான சட்டமூலம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளமையையும் சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் , அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தமிழ் மக்கள் ஒருபோதும் இந்நாட்டில் இரண்டாந்தர குடிமக்களாக வாழ மாட்டார்கள் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஐக்கிய அமெரிக்காவை
பொறுத்தவரையில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேரணையானது
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இரு நாட்டினதும் பல்வேறு உறவுகளுக்கு இது
அடிப்படையாதொன்று எனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த
அதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதானி
ரொபேர்ட் ஹில்டன் அவர்களும் அரசியல் பிரிவிற்கான உத்தியோகத்தர் ஜோயன்ன பிரிசெட்
அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites