அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி பதில் கடிதம்!

0
561
Tamil Political Prisoner Ananda Sudhakar Issue President Replied Letter

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்களின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. Tamil Political Prisoner Ananda Sudhakar Issue President Replied Letter

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண கல்விச்சமூகத்தால் பெறப்பட்ட மூன்று லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் கடந்த 18.06.2018 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய கோரிக்கை கடிதத்தையும் இணைத்து கிளிநொச்சியில் வைத்து கையளித்திருந்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோ அவர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் லக்சுமி ஜெயவிக்கிரம அவர்கள் ஒப்பமிட்டு 20.06.2018 திகதியிட்டு மாகாண கல்வி அமைச்சுக்கு அந்தப்பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக்கடிதத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு இது தொடர்பில் பல வேண்டுகோல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே உரிய கரிசனை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சரியான சட்ட நடைமுறைகளைப்பின்பற்றி செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites