தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்

0
1000
unaited national party former general secretory thissa atanayaka

(unaited national party former general secretory thissa atanayaka)

ஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியானது அடைந்துள்ள பின்னடைவை அக்கட்சியின் தலைமைத்துவம் பொருட்படுத்தாது செயற்பட்டு வருகின்றது.

அந்த கட்சியின் தலைமைத்துவத்தில் காணப்படும் சர்வாதிகார நிலையே கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

மக்களின் எதிர்ப்பார்ப்பும் குறித்த கோரிக்கையை ஒத்த வகையிலேயே காணப்படுகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தினால் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

tags :- unaited national party former general secretory thissa atanayaka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites