போலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது?

0
718
Howard X Singapore Detention

 

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention

கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹொவார்ட் எக்ஸ் என அறியப்படும் அவர், ஹொங்கொங்கில் பிறந்து, அவுஸ்திரேலியாவில் வளர்ந்தவர். பார்ப்பதற்கு வடகொரிய தலைவர் போலவே தோற்றமளிக்கும் அவர் ஊடகங்களில் வெகு பிரபலம்.

கிம் உன் போல் தோற்றமளிக்க அலங்காரங்கள் செய்து அவர் போலவே தோற்றமளிக்கின்றார்.

இந்நிலையில் அவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் கிம், டிரம்ப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், ஹோட்டல் மற்றும் சொப்பிங் மோல் ஊக்குவிப்பு நிகழ்வொன்றுக்காக ஹொவார்ட் எக்ஸ் அங்கு சென்றுள்ளார்.

இதன்போதே சிங்கப்பூர் செங்காய் விமானநிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தன்னை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடுத்து வைத்து, தனது பைகளை சோதனைக்குட்படுத்தி, கேள்விகள் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கிம் – டிரம்ப் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவுகளில் இருந்து தள்ளியே இருக்கும்படி பொலிஸார் தனக்கு தெரிவித்ததாக ஹொவார்ட் தெரிவித்துள்ளார்.