பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை!

0
796
French government ban mobile inn school

பிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் பொது பள்ளிகளில் கையடக்க தொலைபேசிகளை தடுக்க வியாழனன்று வாக்களித்தனர். இது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றாகும். இதனால் வகுப்பறை சிக்கல்களை குறைக்க மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். French government ban mobile inn school

இதற்கு பெற்றோர்கள் பெரிதும் ஆதரவளித்துள்ளனர். தொழிநுட்பங்களின் வளர்ச்சி காரணமாக அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளான்கர் “இது 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு சட்டம் மற்றும் டிஜிட்டல் புரட்சிக்காக இயற்றப்பட்ட ஒரு சட்டம்” என்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கையடக்க தொலைபேசிகள் தான் பிரஞ்சு சமுதாயத்தின் குழப்பங்களிற்கான ஒரு சமிக்ஞையாகும்” எனவும் “புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பது, அவை அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்வது என அர்த்தமாகாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதை விட அதிக நேரத்தை தொலைபேசிகளில் குறுந்தகவல் அனுப்ப, சமூக வலைத்தளங்கள் பார்க்க செலவழிக்கின்றனர். பாடசாலை மைதானங்களில் கூட விளையாடுவதை தவிர்த்து அதிக நேரம் தொலைபேசியில் செலவழிக்கின்றனர். இத்தகைய முறைப்பாடுகள் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்ததை தொடர்ந்தே இத்தகைய முடிவெடுக்க பிரெஞ்சு அரசாங்கம் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**